இந்தி தெரியாது போடா! – ஆற்காடு க.குமரன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2021 No Comment இந்தி தெரியாது போடா! என்றியம்பிட வழி இல்லை தோழா! எங்கு காணினும் ‘ஜி’…….. ஒலிக்கிறது 4’ஜி’ 5’ஜி’ ஆள மயக்குது மக்கள் மத்திய அரசை நம்பவில்லை நம்பாமல் மந்திரிகள் பதவியே இல்லை ஆளும் வருக்கம் ஆடிப் போய்க் கிடக்கிறது நாளும் வழக்கு கூடிப்போய் மிரட்டுது வயிற்றுப் பிழைப்புக்கு வந்த வடக்கிந்தியன் வாயிலாக தென்னிந்தியா முழுதும் தறி கெட்டுத் திரிகிறது இந்தி இந்தி தெரியாது போடா என்றியம்பிட வழி இல்லை தோழா பணியாற்ற வந்தவனிடம் பண்டம் விற்க வழக்கு மொழியாய் வளருது இந்தி வக்கற்ற தமிழனின் நாவினில் வருது முந்தி பெட்டிக்கடையில் குட்டி போடுது வட்டிக் கடையில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தி இந்தி தெரியாது போடா என்றியம்பிட வழி இல்லை தோழா சமற்கிருதத்தில் சடங்கு நடக்குது சந்தேகம் கேளாமல் சன்மானம் கொடுக்குது ஆலயந் தோறும் அருச்சனை நடக்கிறது அருத்தம் தெரியாமல் ஆண்டவனைத் தொழுகிறது. கூட்டம் போட்டு கூவும் கூ...