நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 ஆகத்து 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 1 வானவில் அறிவியல் ! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘ எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும் வானவில்லின் தோற்றம், மறைவு குறித்து நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. எனவே, திருவடிகள் நிலத்தில் பதியாத கோலம் கொண்ட கடவுளை யாம் தரையி...