வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2019 கருத்திற்காக.. முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) முனைவர் வாணி அறிவாளன் திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி 6 எனும் இந்நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தன்வரலாற்று நூலில், அன்னார் 01-08-1973 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வுப்பகுதியில் ஆராய்ச்சித் துணைவராகச் சேர்ந்தது முதல் 31-12-1973 முடிய ஐந்து திங்களில் தான் ஆற்றிய பணிகள் பற்றிய வரலாற்றினைத் தொகுத...