Posts

Showing posts from February, 2018

தமிழ் வளர்கிறது! 19-21 : நாரா.நாச்சியப்பன்

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக.. (தமிழ் வளர்கிறது! 16-18 : தொடர்ச்சி)   தமிழ் வளர்கிறது! 19-21 :  ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ! ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா? ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் ! திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் ! உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால் ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம் சொன்னால் கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் ! காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்!...

அகல் விளக்கு – மு.வரதராசனார். 5.

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக.. ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 4. தொடர்ச்சி ) அத்தியாயம்  2   சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் சிற்றூரில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில்...

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக..   (எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4 தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “ இலம் என்றசை இருப்பாரைக் காணின்  நி லம் என்னும் நல்லாள் நகும் ” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும். நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம். ”வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால் நடைகள் வளர ...