Skip to main content

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் 


மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை
மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர்
அவன் அந்திமத்தில்!
++
பூவாங்கக் காசு போதாததால்
அதை விற்கும் வேலையை
வாங்கிக் கொண்டாள்
ஏழைச் சிறுமி!
++
சிதைந்து உடன்கட்டை ஏறின
இறந்தவருடன்…
சாலையில் இறைக்கப்பட்ட
மலர்கள்…!
++





வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்