Posts

Showing posts from August, 2014

செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      24 ஆகத்து 2014       கருத்திற்காக.. (ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டுவந்துள்ளது. கி.பி. 618இலிருந்து 904 வரை (இ)டாங்குஅரசகுடும்பத்தினர், சங்கன்பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சிபுரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களைவிட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதெனப் பலவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் நகரப் பேருந்துக்காக நின்றோம். பேருந்துக்காகக் காத்திருப்போர் வரிசையாக நிற்க, பேருந்து வந்தவுடன் ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏறினோம். அரசுப்பேருந்துகள் இயங்கும் முறை அருமையாக...

மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்

Image
மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      17 ஆகத்து 2014       கருத்திற்காக..     (ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி) மாமூலனார் பாடல்கள் – நிறைவுரை -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் அரசர்கள் முதலியோரின் உண்மை வரலாறுகள் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள், பல தமிழ் நூல்கள் அழிந்தவாறு அழிந்தனவோ? அன்றி, பழந்தமிழ் நாட்டுப் பெரியார்கள் தம்மையும், தம் போன்ற மக்களையும் பொருட்படுத்திக் கொள்ளாது தமிழையே நினைந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்த் கொண்டு ஆற்றி மறைந்தார்களோ? அறியோம். சில பெரும் புலவர்கட்குப் பின்னால் தோன்றியவர், புனைந்துரைத்த பொய்க்கதைகள் உண்மை வரலாறுகளாகக் கருதப்பட்டன தொல்காப்பியர் வள்ளுவர் முதலியோர் பற்றி வழங்கும் வரலாறுகள் அத்தகைய பொய்க் கதைகளே. பொய்க்கதையை உண்மை வரலாறு என நம்புவதினும், வரலாறு இல்லை என்று கூறுவது சாலச்சிறந்தது.   புலவர்கள் எங்கே பி...

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்

Image
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      17 ஆகத்து 2014       கருத்திற்காக.. ’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! சோனியா போனால் என்ன? மோடி வந்தால் என்ன? சிவப்பு நாடாச் சீர்கேட்டிலிருந்தோ அதிகாரிகளின் உருட்டல் மிரட்டலிலிருந...