சிறுகதை : அணிற்பிள்ளை
சிறுகதை : அணிற்பிள்ளை நட்பு பதிவு செய்த நாள் : 23/07/2012 பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் - பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை. அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன் அண்ணனைத் தவிரப் பிறர் கவனித்து இருக்க மாட்டார்கள். தாத்தாவின் சிறிய அறையில் உள்ள பழைய கூடைதான், அந்த அணிலின் புது வீடு! இதற்கு முன்,அழகன் கைக்குழந்தையாக இருந்த பொழுது, அவனது துணிகளை அடுக்கப் பயன்பட்டது; அதற்கும் முன், அவன் அண்ணன் அறிவனின் விளையாட்டுப் பொம்மைகளைச் சுமந்தது; இன்று வேண்டாத துணிகளால் ஆன, மெத்தையிடப்பட்டு அணிலைத் தாலாட்...