Posts

Showing posts from March, 2012
Image
சீனத்து இலக்கியப் பட்டு பா. கிருஷ்ணன் First Published : 01 Mar 2012 09:37:39 AM IST ஸ்ரீதரன்மதுசூதனன் சீன மொழியின் மிகப் பழைய பாடல் தொகுப்பை அந்த மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு, அதன் மண் வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார் இந்திய வெளியுறவு அதிகாரி ஸ்ரீதரன். "வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை' என்பது நூலின் தலைப்பு. பிற மொழிபெயர்ப்பைப் போல் அல்லாமல், இந்நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கு ஓர் இலக்கியப் பயணமே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். "பயணி' என்ற புனை பெயரில் இந்நூலை தமிழுக்குத் தந்திருக்கிறார். பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் "கலைச் செல்வங்கள் யாவும்' பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல்...