Posts

Showing posts from April, 2010
Image
இன்று ஏப்ரல் 5 பெயர் : க. கைலாசபதி , பிறந்த தேதி : ஏப்ரல் 5, 1933 இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது.
Image
பெயர்: மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை , பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855 மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ் வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... ராஜாஜி சோக்ரதர், கண்ணன் காட்டிய வழி, குடிகெடுக்கும் கள், மார்க்கச அரேலியசர் உபதேச மொழிகள், ராஜாஜி குட்டிக் கதைகள், உபநிஷ பலகணி, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் ராஜாஜியின் (1878-1972) படைப்புகள். வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய இவரது நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. மகாபாரதமும்... ராமாயணமும் தமிழில் எழுதியதை, கவர்னர் ஜெனரல் பதவியை விட முக்கியமாக ராஜாஜி ஒரு முறை குறிப்பிட்டார்.விவேகானந்தர் மற்றும் பாரதியால் பாராட்டுப் பெற்றவர் ராஜாஜி. பின்னாளில் மூதறிஞர் என்று அழைக்கப்பட்டார். தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர் தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர், தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்தவர் சாயுபு மரைக்காயர் (1878-1950). இவர் அமுதகவி என்றும் அழைக்கப்பட்டார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். மனோன்மணிக் கும்மி, உபதேசக் கீர்த்தனம், மும்மணி மாலை ஆகிய நூல்கள் சாயுபு மரைக்காயரின் தமிழாற்றலை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மொழ...
Image

திருமுடிக்காரி, கள்குடியாக் காவலன்

Image

கரந்தைக் கவியரசர் வேங்கடாசலம் பிள்ளை

Image