கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2025 அ கரமுதல ( கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தி யின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து இலங்கை அரசும் இதுதான் நல்வாய்ப்பென்று ஈழத்தமிழர்க்கு எதிர்ப்பாகக் குரல் கொடுப்பதுடன் விடுதலைப்புலி களை இழிவுபடுத்தியும், ஏளனமாகவும் பேசி ஒலிபரப்புகிறது. தமிழகத் தமிழர்க்கு விடுதலை பெற விடுதலைப்புலிகள் உதவக்கூடும்...