வள்ளலடி வணங்குவோம்! – பாம்பாட்டிச் சித்தர்
வள்ளலடி வணங்குவோம்!
பொன்னி லொளிபோல வெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம்போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னி பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடு பாம்பே. (3)
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடிவருமோ
கூடுபோனபின் பலவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே. (40)
மாடகூட மாளிகைகள் வண்ணமண்டபம்
மதிழ் சூழ்ந்த வரண்மனை மற்றும் உள்ளவை
கூடவரா தென்றவந்தக் கொள்கையறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. (43)
– பாம்பாட்டிச் சித்தர்
Comments
Post a Comment