களப்பால் குமரனின் கல்வி மொழிகள்
எவை எவை கற்க அவைஅவை கற்றபின்
அவை அஞ்சாமை தோன்றும்
களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7
+ + +
அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன்
பொய்யா புகழ் பெறுவர்.
களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7
+ + +
பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர்
பொறுமை காத்தல் இழிவு.
களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7
+ + +
பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில்
பிணம் தழுவிப் பெறும் இன்பம் ஒக்கும்.
களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 9:4: பக்கம்.9
+ + +
கல்லான் தாய்மொழியில் கற்றது விரிந்துரையான்
பெற்றது அறிவன்று பிறமொழியில்
களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 95: பக்கம். 9
Comments
Post a Comment