எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2
- தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன
கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள்
மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள்.
வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்
- புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு
மெல்லக் கசிந்து மேவிய கற்களைத்
தள்ளிடும் நீரின் தன்மை போன்ற
காதலின் தன்மை கண்டவ ரல்லரே;
- “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற்
குலனு மோரார் குடியு மோரார்
செல்வனும் ஏழையும் தேர்ந்து பாரார்”
என்னு முண்மை முன்னவர் உணரார்
- செல்வ ராதலின் பல்பெருங் கணக்கரும்
அவர்களில் ஒருவன் ஆடலன் என்போன்
கூரிய மதியும் நேரிய குணமும்
அழகும் இளமையு அமைந்த கல்வியும்
60 சீரிய திறலும் சேர்ந்தொருங் கமைந்து
அரசர்க் கமைந்த அமைச்ச ரெனவே
நன்மதி புகட்டி நலங்கொண் டாட
ஏவலர் தமக்கெலாம் எற்ற தலைவனாய்
விளங்கின னவன்பால் உளங்கொளு மன்பால்
- காதல் பெருகக் கனிந்தனள் அன்பாய்
வணிகர்க் கன்பாய் வளர்ந்தன னாங்கே
எழிலின் அரசியு மிவனுட னிணங்கிப்
பழகுஞ் சமையம் படைத்தன ளன்றே.1
- மடவார் பயில மாதவ மாற்றினும்
முற்றத் துறந்த முனிவரு மிவளை
ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,
பிறர்தம் பான்மை பேசவும் வேண்டுமோ.
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment