அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்

periyaazh

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும்

மறைந்து போன சில இசைக் கருவிகள்

  இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதிகாணாமையின், அவையும் இறந்தனபோலும், இறக்கவே வரும் பெருங்கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று ஆயிரங்கோல், தொடுத்தியல்வது; என்ன? ஆயிரநரம்பிற்றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தர தளவுங், கோட்டினதளவு, மொத்தவென்ப விருமூன்றிரட்டி, வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர் என நூலுள்ளும் தலமுத லூழியிற்றானவர் தருக்கறப், புலமகளாளர் புரிநரப்பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ், செலவுமுறை யெல்லாஞ் செல்கையிற்றெரிந்து, மற்றையாழுங் கற்றுமுறை பிழையான் எனக் கதையினுள்ளுங் கூறினாராக லாற் பேரியாழ் முதலியனவும் இறந்தனவெனக் காண்க.
-அடியார்க்கு நல்லார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்