திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
02. பொருள் பால்
08. அரண் இயல்
அதிகாரம் 075. அரண்
நாட்டிற்குத் தேவையான இயற்கை,
செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள்.
- ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம்
போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும்
கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு.
- மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்
ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள்
காடுகள் கொண்டது அரண்.
- உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின்
உயர்வு, அகலம், உறுதி,
நெருங்க முடியாமை அரண்இயல்.
- சிறுகாப்பில் பேர்இடத்த(து) ஆகி, உறுபகை
சிறுவாயில், பெரிய உள்இடம்
கொண்டு பகைஅழிப்பது கோட்டை.
- கொளற்(கு)அரிதாய்க் கொண்டகூழ்த்(து) ஆகி அகத்தார்
வெல்லக் கடியது; உணவுக்கு,
உள்வீரர்க்கு எளியது, அரண்.
- எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்(து)உதவும்
எல்லாப் பொருள்கள், உள்வீரர்க்கு
உதவுநல்லார் உடையது கோட்டை.
- முற்றியும், முற்றா(து) எறிந்தும், அறைப்படுத்தும்
வளைத்தும், திடீர்ப்போராலும் வஞ்சித்தும்
வெல்ல முடியாதது அரண்.
- முற்(று)ஆற்றி, முற்றி யவரையும், பற்(று)ஆற்றிப்,
வளைப்பை, வளைத்த பகைவரை
வெல்ல விடாதது, வல்அரண்.
- முனைமுகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து
போர்க்களத்தில் பகைவீழப், போர்த்திறன்
வெற்றிபெற, நிற்பது கோட்டை.
- எனைமாட்சித்(து) ஆகியக் கண்ணும், வினைமாட்சி
செயல்திறன் இல்லார்க்குச் சிறப்புகள்
நிறைந்த அரணாலும் பயன்இல்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
(
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை)
Comments
Post a Comment