Skip to main content

இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்

thalaippu_inidheilakkiyam02

5

vanakkam

 இறையே ஏற்பாயாக!

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!
  மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம்.
  “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக என்னை ஒப்படைக்கின்றேன்.. என்
  உடலில்   உணர்வு   அரும்பி நடுநடுங்கி, கண்களில் கண்ணீர் வழிந்தோடி, உன்னருள் நாடி என்னுள்ளம் வாடி, பொய்யான ஒழுக்கங்கைள நீக்கி, ‘உன்னைப் போற்றி ! வெற்றி   தருவாய் போற்றி!’     என்று   தலைமேல் வைத்து வணங்கும் இரு கைகளையும், தளர விட மாட்டேன்! ஆதலால், என் நிலைமையைக்க் கண்டு என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்!” என்பது பாடல் உணர்த்தும் வழிபாட்டு முறை.
  வழிபாடு மன வழிபாடு, வாய்மொழி வழிபாடு, மெய் வழிபாடு என மூ வகைப்படும். உள்ளம் வெதும்பலும் பொய் தவிர்த்தலும் தூய்மையான மன வழிபாடுகளாகும். ‘போற்றி! சய சய போற்றி!’ என்பது வாய்மொழி வழிபாடாகும். மெய்யரும்புதலும், விதிர் விதிர்த்தலும் மெய் வழிபாடாகும். இத்தகைய மூ வகை வழிபாட்டு முறைகளையும் கண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.
  இறை வழி பாட்டில் ஈடுபடும் யாவரும் தத்தம் கடவுளரிடம் இவ்வாறு மூ வகையாலும் வழிபடவேண்டும் என்னும் பொதுத்தன்மையை இப்பாடல் விளக்குகிறது.
  செயப்படுபொருள், செயநீர், செயநீர்க்கருத்தன் முதலானவை தமிழ்ச்சொற்களே. இவை போல் வெற்றி தரும் செய்வினைத்தூய்மை, பகுதிச் சொல்லான செய்   என்பதன் அடிப்பைடயில்   செயம்   எனப்பட்டது.   வெற்றி முழக்கமாகேவா அடுக்குத் தொடராகேவா வரும் இடத்தில் செய செய என்றாகிறது. செய என்பது சய என மாறி உள்ளது. அதனையே மாணிக்கவாசகர்     குறிப்பிடுகிறார். செய அல்லது     சய என்பது பிற மொழிக்குச் சென்று மீ ண்டும் கிரந்த எழுத்துடன் தமிழில் குறிக்கப்படுகையில் அயற் சொல்லாகி விட்டது. எனினும் மாணிக்கவாசகர்         கிரந்த         எழுத்தைப்         பயன்படுத்தாமல்
  மொழித்தூய்மையைப் பேணி மூலத் தமிழ் வடிவிலேயே குறிப்பிட்டுள்ளார். (இருப்பினும் இடைக்காலச் சொல்லான செய என்பதைவிட, இனிமையாக உள்ள பழந்தமிழ்ச் சொல்லான வெற்றி என்பதையே நாம் பயன்படுத்தலாம்.)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 99,  புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்