செல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

vaazhthu_thamizhchelvi_thamizhnenjan04
புதுவைக் கவிஞர் தமிழ்நெஞ்சன், தன் மகள் செல்வி தமிழ்மொழியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்திய பாடல்கள் இரண்டு.
என்றன் பிள்ளை என்னுயிர் தமிழ்மொழி
எல்லா புகழும்
பெற்றிடுவாள் – நாம்
முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின்
மூச்சாய் இருந்து
காத்திடுவாள்
அறிவில் அன்பில் ஆற்றலில் எல்லாம்
அவளே முதலிடம்
பிடித்திடுவாள் – குறள்
நெறியில் நின்று நீள்வினை ஆற்றிட
நெருப்பாய் நின்று
வெடித்திடுவாள்
வாழ்க்கை எதுவென வள்ளுவம் சொன்ன
வழியில் தானே
சென்றிடுவாள் – நம்மை
சூழ்ந்த கேட்டைச் சுட்டெ ரிக்கும்
சுடர்மதி ஆகி
வென்றிடுவாள்
மனதுக் குள்ளே மழையாய்ப் பொழிந்து
மகிழ்ச்சிக் கடலில்
மிதக்க வைப்பாள் – தமிழ்
இனத்தின் பெருமை இமைபோல் காத்து
இழந்த இன்பம்
மீட்க வைப்பாள்
நெருப்பாய் நிமிர்ந்து நிழல்மனம் வெளுக்க
நீள்வினை ஆற்றி
பணிசெய்வாள் -தமிழ்
விருப்பம் போல வாழ்க்கை வாழ்ந்து
வரலாற் றினிலே
இடம்பிடிப்பாள்!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
நலமுடன் வளமுடன் வாழ்க! வாழ்கவே!
சென்ற பிறந்தநாளில் நட்ட  செடி
சென்ற பிறந்தநாளில் நட்ட செடி

vaazhthu_thamizhchelvi_thamizhnenjan03 vaazhthu_thamizhchelvi_thamizhnenjan05+++
இந்தப் பிறந்தநாளில் மரம்! மரமெ ன வளர்வோம் மரமென வாழ்வோம்
இந்தப் பிறந்தநாளில் மரம்! மரமென வளர்வோம்! மரமென வாழ்வோம்!
காரிருள் விரட்டும் கதிரொளி போலக்
கடமை செய்து உயர்ந்திடுவாள் – இங்கே
பேரொளி போல பெருமை மிக்க
பணிகள் செய்து
புகழ்பெறுவாள்
இருபத் திரண்ட கவையிங் கவரும்
இந்நாள் தன்னில்பெற்றிட்டாள் – தமிழர்
இருண்ட வாழ்வில் இன்பப் பேரொளி
இவரும் ஏற்றிட
வாழ்ந்திடுவாள்
வானம் போல விரிந்த நெஞ்சால்
வாழ வழிவகை செய்திடுவாள் – எழில்
கானம் பாடும் கருங்குயில் போலக்
காடே அதிர
கூவிடுவாள்
தமிழ்நிலம் காக்கத் தன்னறி வாலே
தக்க தெல்லாம் செய்திடுவாள் – கு.அ.
தமிழ்மொழி நலமுடன் வளமுடன் வாழ
தமிழ்நெஞ் சத்தாலே
வாழ்த்திடுவேன்!
என்றன் எண்ணம் எதுவென அறிந்து
என்றும் துணையாய் இருந்திடுவாள் – ஆ
கன்றெனத் துள்ளிக் காலச் சுவட்டில்
காலடி தன்னைப்
பதித்திடுவாள்!


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்