க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?
க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன.
உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.
௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.
ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.
எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள் நாள்தோறும் கலக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்தி பரப்பு நிலையங்களும், இந்திக் கற்பிக்கும் பள்ளிகளும் நிரம்ப உள்ளன. தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே இந்தி கற்பிக்கப்படுகின்றது.
அ. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கு, மலையாளம், கன்னடம் மூலமும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
௯. தமிழ்மக்கள் தமிழ் வழிப் பாடங்கள் கற்க விரும்பவில்லை. பணம் கொடுத்தாலும் தமிழ்மூலம் கற்க முன்வருவாரிலர்.
க0. தமிழ் வளர்ச்சிக்காக ஏற்பட்டுள்ள நிறுவனங்கள் தமிழை வளர்க்கும் வகையில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசியும், எழுதியுமே பொழுது போக்குகின்றன. தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோம் என்பவர்கள் பெயர்கள் கூடத் தமிழில் இல்லை.
கக. தமிழ்மொழியை முற்றக் கல்லாதவர்களெல்லாம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றும், ‘மக்கள் தமிழ்’ என்றும் சொல்லிக்கொண்டு தமிழ் ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்த எந்தத் தமிழருமே முன் வரவில்லை.
கஉ. வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்ப முழுமூச்சில் ஈடுபட்டுள்ளன.
க௩. மக்கள் விரும்பும் வரை யார்மீதும் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று இந்திய அரசுவாய்ச்சொல்லோடு வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தியைப் புகுத்திக் கொண்டே இருக்கிறது.
எனவே, இத்தகு சூழல்களில் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் தமிழ் இல்லாது போய்விடும் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை! தமிழர்களே என்ன செய்யப் போகின்றீர்கள்?
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment