Posts

Showing posts from February, 2025

௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை – வி.பொ.பழனிவேலனார்

Image
  ௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை – வி.பொ.பழனிவேலனார் ஃஃஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         01 March 2025         அகரமுதல ( ௰ . தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை இன்று  தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் முறை தவறானது .  ஆங்கிலம் கற்பிக்கும் முறையைப் பின்பற்றியே தமிழும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ் கற்பிக்கக் கையாண்ட முறையே தமிழைப் பொறுத்தவரை சரியானதாகும். அம்முறையில் கற்றவர்தாம் பண்டைய புலவர் பெருமக்கள். பிழையின்றி எழுதவும், பேசவும், அம்முறை பெரிதும் உதவியது. ஆனால், இன்றைய முறையில்  தமிழ் கற்றவர், புலமைப்பட்டம் பெற்றிருந்தும் பிழையின்றி எழுதத் திணறுகின்றனர். தமிழ் கற்பிக்க, எழுத்துக் கூட்டிப் படிக்கும் முறையே  (Alphabetic Method) சிறந்தது. முதலில் எழுத்துகளைக் கற்பித்துப் பிறகு எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்பித்தல் வேண்டும். இந்தக் கட்டுரையாளர் பண்டைய முறையில் தமிழ் கற்றவரே...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – புலவர் கா.கோவிந்தன்

Image
  ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – புலவர் கா.கோவிந்தன் ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         28 February 2025        அகரமுதல (வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ஆகமங்களின் மூலம் ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும்,  வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும்,  அவை, தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக் கொண்டனவ...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்

Image
  கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல் ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         27 February 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி-தொடர்ச்சி ) பூங்கொடி சண்டிலி புகழ்ந்து வேண்டல்           `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப                 வெள்ளம் பாயும்  வியனிசை இதுபோல்   225            இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்; என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்? இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்’           எனநான் பணிவுடன் இயம்பினே னாக,  230         ...

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88

Image
  அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         25 February 2025         அ கரமுதல ( அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85 – தொடர்ச்சி ) அறிவுக்கதைகள்   நூறு 86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டா ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான். அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு வந்து, அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்குக் கூடத்தில் கட்டியிருந்த எருமை மாடு தலையை வேகமாக ஆட்டி ‘ம்மா’ என்று கத்தியது. வந்தவன் உடனே பயந்து, இது எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ஒடியே போய்விட்டான். உடனே தாசிப்பெண் எருமைமாட்டின் காலைப்பிடித்துக் கொண்டு ...

க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்

Image
  க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார் ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         22 February 2025         அ கரமுதல  (௯.   பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰ . தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ.  தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை. ௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை. ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை. எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள் நாள்தோறும் கலக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்தி பரப்பு நிலையங்களும், இந்திக் கற்பிக்கும் பள்ளிகளும் நி...

வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்

Image
  வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன் ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         21 February 2025         No Comment ( ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் –  தொடர்ச்சி ) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை – கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும் உள்ள நல்லனவற்றையெல்லாம் தேர்ந்து தன்னகத்தே கொண்ட ஒருநெறியினைப் பின்பற்றத் தொடங்கிய மக்களால், பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யாகங்களில், உயிருடைக் கால்நடைகளுக்குப் பதிலாக, மாவினால் செய்யப்பட்ட, அவற்றின் வடிவங...