தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை
அகரமுதல
166, மார்கழி10, 2047 / திசம்பர்25, 2016
- தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப
பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த
தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.
- நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி
இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து
தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.
- சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை
ஆரிய ரென்னு மயலவர் தங்கள்
பேரறி யாத பெருமையி னாண்டாள்.
- விந்த வடக்கு விளங்கி யிருந்த
சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.
- சிந்துவி னொன்றோ திசையிசை மேய
நந்திய வாணிக நாடிருப் பாக
வந்தனர் வாழ்ந்து மணித்தமிழ் மக்கள்.
புலவர் குழந்தை: இராவண காவியம்,
1. தமிழகக் காண்டம்: 2. தமிழகப் படலம்
Comments
Post a Comment