பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
அகரமுதல 164, கார்த்திகை 26,
2047 / திசம்பர் 11,
2016
பாரதியைப் போற்றுநாடே!
பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்தமுன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே!
மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த
மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே!
மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய
மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே!
தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த
மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!
Comments
Post a Comment