திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்
திருக்குறள் அறுசொல் உரை
03. காமத்துப் பால்
14. களவு இயல்
அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்
தகுதிமிகு தலைமகளது அழகு,
தலைமகனது மனத்தை வருத்துதல்
(01-10 தலைமகன் சொல்லியவை)
- அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை
தெய்வ மகளோ….? மயிலோ….?
மண்மகளோ….? என்மனம் மயங்கும்.
- நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு
அவளின் எதிர்ப்பார்வை, தெய்வமகள்
படையோடு தாக்குவது போன்றது.
- பண்(டு)அறியேன் கூற்(று)என் ப(து);அதனை, இனிஅறிந்தேன்,
“பெண்வடிவில் போரிடுவதே எமன்”
என்பதை, இன்று அறிந்தேன்.
- கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால், பெண்தகைப்
இவ்இளம் பெண்ணின் கண்கள்,
காண்பாரோடு போரிட்டு உயிர்குடிக்கும்.
- கூற்றமோ….? கண்ணோ….? பிணையோ….? மடவரல்
எமனோ….? கண்களோ….? பெண்மானோ….?
இவளது பார்வையில், இம்மூன்றும்.
- கொடும்புருவம் கோடா மறைப்பின், நடுங்(கு)அஞர்
இவளது புருவம் வளையாது
இருந்திருந்தால், துன்பம் வந்திராது.
- கடாஅக் களிற்றின்மேல் கண்படாம், மாதர்
இவளது இளமார்பக மேல்ஆடை,
யானையின் முகப்படாம் போன்றது.
- ஒண்ணுதற்(கு) ஓஒ உடைந்ததே…! ஞாட்பினுள்,
பகைவரிடம் என்வீரம், தோற்காது;
இவளது அழகுமுன், தோற்றதே….!
- பிணைஏர் மடநோக்கும், நாணும் உடையாட்(கு),
மான்பார்வை, நாண்அழகு உடையாளுக்கு
மற்ற நகைகள் எதற்கு….?
- உண்டார்கண் அல்ல(து), அடுநறாக், காமம்போல்,
கள்ளை, உண்டால்தான் மகிழ்ச்சி;
காதலியைக், கண்டாலே மகிழ்ச்சி.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment