Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல்




வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 

36 (2.06) காமம் விலக்கல்


தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல் 36. காமம் விலக்கல்

   351. காம மகத்தெழு மாமத வெறியே.
காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும்.
  1. இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே.
இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும்.
  1. இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம்.
சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும்.
354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம்.
நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும்.
  1. காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்.
காமம் அறிவையும் மனத்தையும் கெடுத்திடும்.
  1. காம மெழுங்காற் கடவுளை யுள்ளுக.
காம எண்ணம் தோன்றும் போது கடவுளை நினைக்க வேண்டும்.
  1. அறிவெனுந் தோட்டியா னதனைக் காக்க.
அறிவெனுங் காவலினால் காமத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.
  1. அதைவளர்ப் பவைதமை யகத்தைவிட் டோட்டுக.
காமத்தைத் தூண்டுபவற்றை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.
  1. அதையடு மொன்றை யகத்தினுட் கொள்ளுக.
காமத்தை வெல்லக் கூடிய ஒன்றை மனத்தில் நினைக்க வேண்டும்.
  1. அதைநன் குள்ளி மதவெறி களைக.
அதை நன்றாக மனத்தில் நினைத்து வெறியினை நீக்க வேண்டும்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்