Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்




வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05)

 – இன்பந் துய்த்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி)
தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல்

35. இன்பந் துய்த்தல்


341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம்.
வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும்.
  1. துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும்.
இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
  1. முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல்.
இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும்.
  1. தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம்.
தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு இன்பம் கிடைக்கும்
  1. தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே.
தான் மட்டும் இன்புற நினைத்தால் தனக்கு இன்பம் கிடைக்காது.
  1. ஊட லுணர்தல் புணர்த லதன்வகை.
ஊடலும் அதனை உணர்ந்து நீக்குதலும் புணர்தலும் இன்பங்களாகும்.
  1. ஊட னிமித்த முடனுட னாக்குக.
ஊடலின் காரணத்தை அறிந்து அதனை உடனுக்குடன் நீக்குதல் வேண்டும்.
  1. இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க.
வாழ்க்கைத்துணையை வேண்டியும் புணர்ந்தும் இன்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
  1. இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக.
வாழ்க்கைத்துணை மனம் வருந்துமாறு பிரிந்து செல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.
  1. துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம்.
வாழ்க்கைத்துணை மனம் வருந்தத் துறவறம் மேற்கொள்வது அன்பிலாத செயலாகும்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்