ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென்இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்
பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய சாதகக் கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தருமவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக இருந்திருக்க வேண்டும். அக்கதைகளில் ஒரு சில, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து, அக்காலத்திற்கு முன்னரும் பின்னரும் போலவே, நெருக்கமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. அக்கதைகள், தம் இனத்தைத் தாமே கொன்று தின்னுபவராக நம்பப்படும் பழங்குடியினர் என்றும் பெண் பூதங்கள் என்றும் அழைக்கப்படும் “யக்கினீசுகள் ‘’இசுரிபவத்து” நகரில் வாழும் ‘’தம்பண்ணி “ தீபத்தோடு (இலங்கை) நடைபெற்ற வணிகர்களின் கடற்பிரயாணங்கள் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்திற்கு அண்மையில் வணிகர்களின் கலங்கள் உடைந்துவிடும்போது, யக்கினீசு என்ற அவர்கள் அவ்வணிகர்களுக்கு உணவும், மதுவும் அளித்து அவரைக் காத்து மணந்து கொள்வதும் செய்து, இறுதியில் அவர்களைத் தின்றுவிடுவதும் செய்வர்.
இந்த யக்கினீக்கள், இரைதேடி, கல்யாணி ஆறு முதல் நாகதீபம் வரை கடற்கரையில் அலைந்து திரிவர். (Valahassa Jataka No.196.) நாகதீபம் என்பது, ஈழம் மலபார் கடற்கரைகளைக் குறிக்க வழங்கப்படும் அத்தீவு யக்கினீக்களால் இலங்கையின் நெருக்கமாக அகப்படுத்தப்பட்டிருந்தது. பழங்குடியினர் பற்றிய பழைய இராமாயணக் கட்டுக்கதைகளின் நினைவுச் சின்னம் இவை என்ற உண்மை ஒருபால் இருக்க, ஒரு பிரிவு மக்கள், இலங்கைக்குப் பயணம் செய்து, ஆங்குச் சந்நியாசிகள் ஆயினர். (Hatripala Jataka. 509: Mugapakka Jataka – 538), சிறிய வில்லாளனாகப் பிறந்த புத்தர்தாமும், தக்கசீலத்தில் வேதங்களைக் கற்றுத் தம் கல்வியை நிறைவு செய்துகொண்டு, வாழ்க்கை அனுபவங்களைப் பெற ஆந்திர நாட்டிற்குச் சென்றார். (Bhima Sena Jataka. 80) அவர் ஆங்குப் பெற்ற அனுபவம் குறித்து நாம் பொருட்படுத்தவில்லை. அவருடைய பிறவிகளில் பிறிது ஒன்றில், சேரி என்ற நாட்டில் அவர், ஒரு மண்பாண்டம் வணிகர். அவர் சேரிவன் என அழைக்கப்பட்டார். இச்சேரி, பெரும்பாலும் சேரநாடு ஆம். விலை கூவி விற்கும் வணிகனாக, ஊர் ஊராகச் செல்லும் அவர் பயணத்தில், அவர் தெலவாஃக” ஆற்றைக் கடந்து அந்தபுரா’வை அடைந்தார். அதாவது அந்த ஆந்திர நாடு, சேர நாட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை. (சேரிவாண்ய சாடகா எண் – 3)
போதிசத்தரின் பிறிதொரு அவதாரத்தில், அவர் பிராமண மகாகால”ரின் மகன் ” அகித்தி” ஆகப் பிறந்தார். அவர் துறவியாக மாறி உடன் பிறந்தவளான “யசவதீ” என்பாளுடன் பெனாரசிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள ஓரிடத்திற்குப் போய்விட்டார், ஆனால், அவர் மீது அன்புகாட்டுவாரின் அன்புத் தொல்லைகளிலிருந்து விடுபட, அவ்விடத்தை அவராகவே விடுத்து, தமிலா” நாட்டை அடைந்து, காவேரி பட்டணத்திற்கு அருகில் இருந்த, ஒரு மலர்த் தோட்டத்தில் (உய்யானம்) தங்கியிருந்தார். இதிலிருந்து இந்நாட்டுப் புறக்கதைகள் வழக்கில் இருந்த போது, காவேரிப்பட்டணம், சோழர்களின் தலைநகர்களில் ஒன்று (அக்கதையில் சோழர்கள் பெயர் சுட்டிக் கூறப்படவில்லை. என்றாலும்) என்பதும், வட இந்தியக் கிளைமொழிகளில் அது, ‘காவெரபட்டன” மாக மாறி வழங்கப்பட்டது என்பதும், ஆற்றுப் பெண் தெய்வத்தின் தந்தை பெயர் கவெரரிசி” என்றும், கட்டுக்கதை பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது என்பதும் உய்த்துணரப்படும். ஈண்டும் அகித்தி’ அன்பு செலுத்து வோரால், அன்புத் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அதனால், ‘ அஃகிதீய” என அழைக்கப்படுவதும், பெரும் பாலும், நாகதீபம்” போன்றதே ஆனதும், தம்ப பண்ணி ” (ஈழம்) என்ற தீவிற்கு அண்மையில் நாகர்களின் நாடாம் மலபார்க் கடற்கரையான “காரதீபம்” என்ற இடத்திற்குச் சென்று விட்டார். அங்கு, “அகித்தி” அதாவது போதிசத்தர் நிறை பேரறிவு பெற்று விட்டார். “அகித்தி” ஒருசிலரால், நிலைபேறுடைய காரணம் ஏதும் இன்றி, அகசுத்தியராகக் கருதப்பட்டார்.
சஃகபாஃகூ
சாதகா கதைகளில் காணப்படும், தென்னிந்தியா பற்றிய இவைபோலும் குறிப்புகள், கி.மு. முதல் ஆயிரத்தாம் ஆண்டின் மத்தியில், தென் இந்தியா, வட இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடவில்லை. இந்தியாவின் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையில் அரசியல் அல்லாத பிற உறவுகள், எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே இருந்து வந்தன என்பதை உறுதி செய்கின்றன. புத்தர் இறந்த, பெளத்தர் சொல் நடையில் கூறு தாயின், உலகப் பேரிறைவன் “பரினியான” படுக்கையில் படுத்துவிட்ட அன்று (பரினி பான பஞ்சம்ஃகி நிபன்னெ லொகநாயகொ – மகாவம்சம் :7:1) சிங்கப்படை கொண்ட சஃகாபாஃகவின் மகன் விசயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழுநூறு பேருடன், “லாள’’ (ராத – கிழக்கு வங்காளம்) நாட்டிலிருந்து அவனுடைய தீயொழுக்கத்திற்காக, அவனுடைய தந்தையால் நாடுகடத்தப்பட்டு, சிலோனில் அடியிட்டான். கலத்தில் ஏற்றிக் கடலில் விடப்பட்டான். அவன் கடற்பயணம் பற்றிய நிலவியல், வழக்கம்போல் நம்புதற்கு இயலாத ஒன்றாம் . அவன் வட பம்பாயைச் சேர்ந்த இன்றைய சோபராவாம் “சப்பர காவில்” கரை இறங்கினான். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரிபுளுசு என்பவரால், சோபட்மா என்பது கீழ்க்கடலைச் சேர்ந்த துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுளது. ஆதலின், இது பெரும்பாலும் ஒரு தவறு ஆகும். வங்காளக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சிலோனுக்குச் செல்ல வேண்டிய ஒரு கலம், சோபாவுக்குச் செல்வது இயலாத ஒன்று. அங்கிருந்து, அவன் மீண்டும் கலம் ஏறிச் சிலோனுக்கு வடக்கில் இருந்த தம்பபண்ணியில் கரை இறங்கினான். ஆங்கு வாழ்ந்திருந்த மக்களாம் ‘’யக்கர்”களை (யட்ச) வென்று அழித்து, அந்நாட்டின் அரசன் ஆகிவிட்டான். தனக்கும், தன் உடன் வந்தவர்க்கும் மனைவியர் வேண்டி, பண்டு அரசன் மகளை இசைவிப்பதற்காகவும், ஏனையோர்க்கும் மனைவியர்களைப் பெறும் பொருட்டும், பரிசில் பொருள்களோடு, ஆன்றோர் சிலரை தக்சின (தென் இந்தியா) நாட்டில் உள்ள மதுரைக்கு அனுப்பிவைத்தான். (மதுரை அரச்ன “பண்டவ’’ என அழைக்கப்பட்டான். பதஞ்சலி, பாண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டிய என்ற சொல்லைத் தோற்றுவிப்பது போல, பாலி மொழி எழுத்தாளர்கள், “பாண்டியா” என்ற சொல்லை, அவர்களுக்கு நன்கு தெரிந்த பாண்டவர் என்ற சொல்லாகக் கருதுவர்). எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், அணிகளால் ஒப்பனை செய்யப்பெற்று, யானைகளும், குதிரைகளும், பொதிநிறை வண்டிகளும் பின்தொடர் சிலோன் சென்றனர். இந்தக் கதை, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான . மிகப்பழைய போக்குவரத்து, தொடர்ந்து இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. இது பாண்டியர்களும், வடநாட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகா அந்நியர் அல்லர், மாறாக வழக்கமான நிகழச்சிபோல, பாண்டியர் மகள் ஒருத்தி, விசயனுடைய கைப்பிடிக்க, ஆணையிட்டுப் பெருமளவு ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர் என்பதையும் உறுதி செய்கிறது. அருச்சுனன், சித்திராங்கதாவையும் மணந்து கொண்டு, நாகர் மகள் உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விசயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினியாம் “குவண்ண” என்பவளோடு அவன் கொண்ட உறவு, போன்றதன்று. மாறாகப், புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே
“ததொ சோ விசயொ ராச பண்டுராசச துஃகிதரம் மஃகதா பரிஃகாரெண மஃகேசித்தே பிஃகிசேசயி
-மகாவம்சோ – 7:72”
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment