உலக நட்பு நாள் வாழ்த்துகள் – சேது சுப்பிரமணியம்
(ஆகத்து முதல் ஞாயிறு)
சாதி, இனம் சாராது
சமயம், மொழி பாராது
நாடு, நிறம் நாடாது
செல்வநிலை தேடாது
பாலினமும் பாராது
ஊனங்களை உணராது
குற்றங்குறை கூறாது
எத்தனை இடர் வரினும்
எள்ளளவும் மாறாது
சொத்து சுகம் இழந்தாலும்
சொந்த பந்தம் இகழ்ந்தாலும்
தத்தளிக்கும் சூழ்நிலையில்
தனது நிலை பாராது
உன்னத நிலையிது
கள்ளமின்றிப் பழகிடும்
அற்புத உறவிது
இவ்வுறவுக் கெவ்வுறவும்
ஈடு இணை இல்லையே
இவ்வுறவுக் கென்றேன்றும்
வானம்தான் எல்லையே!
நட்புடன்
சிலேடைச் சித்தர் சேது சுப்பிரமணியம்
சிகாகோ
தரவு: முதுவை இதாயத்து
Comments
Post a Comment