மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்



மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

saa.ramanusam-pulavar01

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி
மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து
துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா
நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே!
modi04 sonia02
அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை
எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ!
ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே
உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த
உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா!
எழுவாரா ! தொழில்செய்ய! எண்ணுவாரா! மத்தியிலே -உடன்
ஏற்றிடுவீர் ! சிந்தித்து மாற்றமது புத்தியிலே!
eezham-genocide23
perarivalan_and_six01
tamilfishermen03



அகரமுதல 38

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்