Skip to main content

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்


  1. அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல்.
கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும். திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுத்தில் உள்ள 15 நடுகற்களையும் இத்தொழில்நுட்பம் மூலம் வரைந்த வரைபடத்தின் மாதிரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
மாவட்டந்தோறும் உள்ள அனைத்து நடுகற்களையும் கண்டறிந்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் திரட்டியும், ஒளிப்படம் எடுத்தும் அதைப் பேண வேண்டிய தேவையைப் பொதுமக்களுக்கு உணர்த்தவேண்டும். தமிழக அரசை நடுகற்களைப் பாதுகாக்க உரிய முயற்சி எடுக்க வலியுறுத்துவதுடன் நடுகற்கள் மற்றும் அவைபோன்ற மரபுச்சின்னங்களை தமிழ்நாட்டில் வரலாற்று நினைவுச்சின்னங்களாக (Historical Monuments of Tamil Nadu) அறிவிக்க இம்மாநாடு உதவவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு மரபுச்சின்னமும் அழிந்து விடாமல் பாதுகாப்பதுடன் தமிழர்களின் செழுமையான வரலாறும் உயிரைச் துச்சமென மதித்து நம் மண்ணையும் நம் முன்னோர்களையும் காத்த வீரர்கள் நடுகல்லாக பல்லாண்டு வாழ நாம் அனைவரும் முயற்ல்வோம்!

  (ஒளிப்படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)nadukal-heroesstone-Format 1 nadukarakl-heroesstone-Format 2

ச.பாலமுருகன்
துணை வட்டாட்சியர்
balakumaran-nadukal05மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவண்ணாமலை
பேசி – 9047578421
மின்னஞ்சல் – balu_606902@yahoo.com)
(சொந்த ஊர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம்,
ஆர்வம் – தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, தொல்லியல். கல்வெட்டு}
(நிறைவு)


அகரமுதல 38

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்