பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) …

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

keattuppaarungal

     இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
     இல்லையென்று சொல்லுவதில்லை
     கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
     காட்சிதர மறுப்பதுமில்லை 
      ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
      அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
      நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்
      நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்
     உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
     உள்ளமதில் வந்துநின்றிடுவான்
     தெளிவுடனே நாளும்தேடுங்கள்  - அவன்
     விரைவினிலே உதவவந்திடுவான்
     ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
     எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
     தோழமையாய் இருந்துபாருங்கள் -அவன்
     துயர்துடைக்க வந்துநின்றிடுவான்
     கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
     கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
     கண்ணீரால்நனைத்துப்பாருங்கள் – அவன்
     காலமெலாம் உதவிநின்றிடுவான்
     சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
     தனைமறந்து பக்கம்வந்திடுவான்
     தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
     இனிமையெலாம் தந்துநின்றிடுவான்
     காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
     கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
     ஒளியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
   நலமனைத்தும்தந்துநின்றிடுவான்
    நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
    நீதிதர மறுப்பதுமில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
    பூரணமாய் தந்துநின்றிடுவான்
kaieanthungal

தரவு – முதுவை இதயத்து

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்