Posts

Showing posts from October, 2026

பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு: நூலாய்வு 1/2

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்       01 November 2026       அ கரமுதல முனைவர் செ.இராசேசுவரி எழுதியுள்ள பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு நூலாய்வு 1/2 நூலாசிரியர் முனைவர் செ.இராசேசுவரி, மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். எட்டிற்கு மேற்பட்ட ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஆங்கிலத்தில் தமிழ்க்கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். ‘தமிழணங்கு’ இதழின் ஆசிரியராக இருந்தும் வேறு சில இதழ்களில் பணியாற்றியும் இதழ் உலகிலும் முத்திரை பதித்து வருகிறார். வெளி மாநிலத்தவருக்கும் வெளி நாட்டவர்க்கும் தமிழ் மொழியும் கற்பித்துள்ளார். கிரேக்கம், எபிரேயம், சப்பானியம் முதலான மொழிகளையும் கற்றவர். எனவே, கிரேக்கம்-தமிழ் அகராதி, எபிரேயம்-தமிழ் அகராதி உருவாக்கங்களில் தன் பங்களிப்பை அளித்துள்ளார். …. விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவரின் பண்பாட்டு நகர்வுகள் என்னும் நூலைப்பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம். 158 பக்கங்கள் கட்டுரைப் பகுதிகள்  கொண்ட இந்நூலில் 9 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பண்பாட்டு ஆய்வு நூல் வ...