ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் – தொடர்ச்சி)
7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 – 500
பாலத்தீனமும் இந்தியாவும்
கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். சீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (I Kings. X:10). அந்நாட்களில், இப்பண்டங்கள், இந்தியாவிலிருந்துதான் மேற்கு நாடுகளுக்குச் சென்றன. இம்மணப் பொருள்களும் நவரத்தினங்களும், அரசியின் கைகளை அடைவதற்கு முன்னர், அவை இந்தியப் படகுகளில், ஆப்பிரிக்கக் கடற்கரையை அடைந்தன என உறுதியாகக் கூறலாம்.
‘’ஒப்பியரிலிருந்து ஒப்பியர் (Ophir) பொன்னை ஏற்றி வந்த இராம் (Hiram) கப்பல் படையும், அங்கிருந்து ஏராளமான அகில் மரங்களையும், நவரத்தினங்களையும் கொண்டுவந்தது. அரசன், அகில் மரம் கொண்டு, இறைவன் திருக்கோயில், அரசன் பெருங்கோயில்களுக்கான தூண்களையும், இசைவாணர்களுக்கு வில்யாழ், விரல் தெறித்து இசையெழுப்பும் நரப்புக் கருவிகளைச் செய்தான். அதன்பின்னர், அத்துணைப் பெருமளவிலான அகில் மரங்கள் இந்நாள் வரை வரவில்லை, காணப்படவும் இல்லை ,’’ (1 Kings X:11-12). இந்த அகில் மரங்கள், சந்தன மரங்களாக அடையாளம் காணப்பட்டன. அல்முக்கு (Aimug) என்ற அதன் ஆங்கிலப் பெயர், சமற்கிருத வலகு” என்பதன் திரிபாகக் கருதப்பட்டது. தென் இந்தியாவின், சிறப்பாக, மைசூர், கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களின் உள்நாட்டுப் பொருளாம் இச்சந்தன மரம், குஜராத் மாநிலத் துறை முகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, அரேபியா வழியாகச் சிரியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஒப்பியரிடமிருந்து (Ophir) எடுத்துக்கொண்ட பொன்னில், முழுமையும் இந்திய நாட்டுப் பொன்தானா, அல்லது ஒரு பகுதிதானா என்பது ஒப்பியர் பற்றிய வாதத்தின் முடிவாம். விளக்கத்தைப் பொறுத்துளது. ஆனால், சாலமன் மிகப் பெரிய அளவிலான பொன் பெற்றிருந்தமையால், அவனுடைய அப்பொற்களஞ்சியத்தின் ஒரு பகுதி. இந்தியா விலிருந்து பெறப்பட்டதாதல் கூடும் (1. Kings. X: 14-17 and 21). “‘இராம் (Hiram) கப்பற்படையோடு தார்சிசு (Tharshish) கப்பற்படையொன்றையும், அரசன் கடலில் பெற்றிருந் தமையால், தார்சிசு கப்பற்படை மூன்றாண்டுக்கொருமுறை பொன், வெள்ளி, தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில்களோடு, வந்து சென்றது என மேலும் அறிகிறோம் (1 Kings.X.22). அரசன் தந்தத்தினால் ஒரு பெரிய அரியணை செய்து, அதன் மேற்பரப்பைச் சிறந்த பொன் கொண்டு பூசி மெருகிட்டான்” (1. Kings.x.18)
எபிரேய மொழி “ஃகபின் “, எகிப்திய மொழி எபு” ஆகிய இரு சொற்களுமே, சமற்கிருத “இபுஃக” என்ற சொல்லி லிருந்து பிறந்தன வாதலையடுத்துத், தந்தத்தைக் குறிக்கும் ஈடன்” “ஃகபின்” என்ற எபிரேய மொழிச் சொல், யானை யின் “பல்” எனும் பொருள் தருவதான “‘இப்புஃக தந்த” என்ற சமற்கிருதச் சொல்லின் மொழி பெயர்ப்பாகக் கொள்ளப் படுமாதலின், அவ்வாறு வந்த தந்தங்களில் ஒரு பகுதி, இந்தியாவால் கொடுக்கப்பட்டது என்பது உண்மையாதல் கூடும். (‘எல்” (el) என்பது, அராபிய மொழியில், சொற்களின் முன் இணைக்கப்படும் இடைச்சொல்லாதலின் “எல்-எபாசு” (Elephas) என்ற கிரேக்கச் சொல் எபு (ebu) என்பதிலிருந்து பிறந்ததாம்.) பிற்காலத்தில் நிகழ்ந்தது போலவே, வாலில்லாக் குரங்குகளும், மயில்களும், ஆசைக்கு வளர்க்கும் உயிரினங் களாக, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. எபிரேய மொழி “கோப்பு” (KOPH) சமற்கிருத “கபி” (Kabi) ஆகும். (இதழசிரியர் குறிப்பு – தமிழ்க் கவி என்னும் சொல்லில் இருந்தே கபி உருவானது.)ஏப்” (ape) எனும் சொல், எகிப்தியரால் ‘’கபு” (Kabu) என்ற வடிவில் கடன் வாங்கப்பட்டது. மயிலைக் குறிக்கும் எபிரேய . மொழியின் துக்கி (Thukki) மயில், பேரழகு வாய்ந்த வால் உடையவாதல் கருதி, தமிழில் வால் எனும் பொருளில் வழங்கும் தோகை என்பதன் திரிபாம்.
எபிரேய மக்கள். இந்தியாவிலிருந்து அவற்றின் பெயர்களோடு பெற்ற பிற பொருள்களாவன: சடின் (Sadin) பருத்தி உடைகள். திராவிடச் சிந்துவிலிருந்து பிறந்தது. (முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது) கற்பசு (Karpas) பருத்தி. சமற்கிருத ‘கற்பாசு” (Karpasa) என்பதிலிருந்து பிறந்தது. கடைசியாக, “அஃகல்” (Ahal) தமிழ் அகில், சமற்கிருத ‘’அகரு’’ கிரேக்க “அகலோச்சும்” (Agallochum) ஆங்கிலத்தில் ‘’ஈகில் உட்(டு)’ (Eagle-wood) அலோசு உட்டு (Aloes-Wood) அல்லது “லின் – அலோசு” (lign-alloes) (நறுமணச் செடிகள், காழகில், நிலவாகை ஆகியவற்றாலான தங்கள் எல்லா ஆடைகளும்’’ என்கிறது வழிபாட்டுப் பாடல் (All they garaments of myrrah and aloes and cassia – Psaln xlv:8): பாலத்தீனத்திற்குச் சென்ற மற்றொரு இந்திய வணிகப் பண்டம், “கருங்காலி”.
திருவாளர் ‘’சுகாப்பு” அவர்கள், நன்மிகப் பழைய, தெளிவான பழைய கட்டளையின் (Old Testament) குறிப்பு , எழெக்கில் (Ezekiel) அதிகாரம் 27 பிரிவு 13இல் வருகிறது. அதில், அது, தயரின் (Tyre) வாணிகப் பண்டங்களுள் ஒன்றாகப் புலப்படுகிறது. தேடன் (Dedan) நாட்டு மக்கள், தங்கள் வணிகர்கள் ஆவர். பல தீவுகள், அவர்களின் வாணிக நிலையங்களாம், தந்தத்தாலும் கருங்காலியாலும் ஆன ஊது கொம்புகளைப் பாத காணிக்கையாகத், தங்களுக்காக, அவர்கள் கொண்டு வந்தனர். (The men of Dedan were thymer – chants; many isles were the merchandise of thie hand; they through thee, fora present, horms of ivory and ehony) தேடன் என்பது பருசிய வளைகுடாவின் தென்கரையாகும் என, ஆக்குசுபோர்டு பதிப்பாசிரியர் கூறும் விளக்கம் சரியானதாயின், மேலே கூறிய இப்பகுதி, கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வரும் கருங்காலி மரத்தின் நிலையான வாணிக நிகழ்வைக் குறிப்பிடுகிறது. கருங்காலி, பாரிகாசா விலிருந்து (Barygaza) ஒம்மனா (Ommana) அப்லோகசு (Apologws) பகுதிகளுக்குக் கடலில் அனுப்பப்பட்டது எனக் கூறும் பெரிபுளுசு கூற்றை உறுதி செய்கிறது (Scor’s Periplus. P.153), பிற்பட்ட காலத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வாணிகம், பழங்காலத்திலும் இருந்துள்ளது என வாதிடுவதில் உள்ள நியாயத்தின் வலுவை உறுதி செய்வதுமாம்.
இந்தியாவும் அசுரியாவும்
கி.மு. 850 ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் சால் மெனெசர் (Shalmaneser) அவர்களின் ஒற்றைக் கல்லாலான சதுரத் தூபியில், வாலில்லாக் குரங்குகள், இந்திய யானைகளின் உருவங்கள் உள்ளன. அசிரியப் பேரரசன், மூன்றாம் திக்குலத்து பிலே சரின் (Tig|ats Pilesar) நிம்விடு (Nimwd) கல்வெட்டுகள், அசரின் (Ashur) பேரறிவு கண்டு கொண்ட காரணத்தால் எங்கள் இறைவா கடல் நாட்டு அரசன், யாகினை (Yakin) மெரோடக்கு பலடன் (Merodach-baladan) எவ்வாறு வெற்றி கொண்டான் என்பதைக் கூறுகிறது. அவன், தன் நாட்டு அளவிறந்த பொன் தூள்கள், பொற்கலங்கள், பொன்னாலான கழுத்தணி, விலையுயர்ந்த இரத்தினக் கற்கள், கடல் படு பொருள் (முத்து) நீர் வளர்பிரம்பு ஒரு பால் வண்ணமும், ஒருபால் பிறிதொரு வண்ணமுமாக வண்ணம் ஊட்டப்பெற்ற ஆடைகள், எல்லாவகையிலுமான ‘ மணம்தரும் உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் திறைப் பொருளாகக் கொண்டு வந்து கொடுத்து எவ்வாறு பணிந்து போனான் என்பதைக் கூறுகிறது. இங்கே எடுத்துக் கூறிய எல்லாமே, அந்நாளைய, இந்திய ஏற்றுமதிப் பொருள்களாம். பாரசீக வளைகுடாத் துறைமுகங்களைப் பருசஷய நாட்டிற்குக் கிழக்கில் வெகு தொலைவில் சார்மணியம், இமயம் போலும் இடங்களாக ஆக்குவதையும் அவன் செய்தான். (Scoff’s Periplus, Page:160)
‘கடலின் நுழைவிடத்தில் இடம்பெற்ற தைரசு என்ற வாணிக நிலையத்தில் (Ezekil. XVII.19) பளிச்சிடும் இரும்பு, தரம் தாழ்ந்த இலவங்கப்பட்டை , மருந்தாகப் பயன்படும் மணம் தரும் ஒருவகைப்புல் ஆகிய பொருள்கள் இருந்தன. (இந்திய இரும்பைக் காய்ச்சிப் பக்குவப்படுத்துவது குறித்த கிரேக்க நாட்டுத் தனி ஒப்பந்தம், பிற்காலத்தில் உருவாயிற்று என்கிறது, திருவாளர், வார்மிங்குடனின், ‘’இந்தியாவுக்கும் உரோமப் பேரரசுக்குமிடையிலான வாணிகம்” என்ற நூல். (Commerce between the Roman Empire and India – by Warmington. page:258): பளிச்சிடும் இந்திய எஃகு, பழைய காலத்தில், பல்வேறு நாடுகளால், போர்வாட்கள் பண்ணுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது, இலவங்கப்பட்டையின் பழைய பெயர் காசியா (Cassia) என்பதாம். நறுமணம் கமழும் ஒரு வகைப் புல்லின் பெயர் கலமசு (Calamus) என்பதாம்.
நறுமணப் பொருள்கள், இரத்தினக் கற்கள், பொன் ஆகிய பொருட்களைப் போலவே, இப்பொருட்களும் சீபா {Sheba) அரசியாரின் வணிகர்களால் இந்தியாவிலிருந்து தைரசுக்கு Tyrus) எடுத்துச் செல்லப்பட்டன. (ஏழெகில் – 17:22)
கி.மு. 704 – 681இல் ஆட்சி புரிந்திருந்த சென்ன செரிபு (Sennacherib) என்ற அரசன், நினவே (Ninevch) என்ற நகரை விரிவுபடுத்தி, அதில் தனக்காக ஓர் அரண்மனையைக் கட்டி, ஓர் பெரிய மலர்த்தோட்டத்தையும் எழுப்பி, அத்தோட்டத்தில் ஏனைய மரங்களோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, ஆட்டுமயிர் விளையும் மரங்களையும் (250 ஆண்டுகட்டுப் பிறகு, ஃகிரோடோடசு (Herodotus) அவர்களால் பருத்திச் செடியைக் குறிக்க வழங்கப்பட்ட ஒரு தொடர்) பயிரிட்டான், (Journal of the Royal Asiatic Society. 1910 page: 403 Pinches.)
‘’இந்திய முன்னோர்கள், உயிரினங்கள் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாப் பகுதிக்கும், ஆப்பிரிக்க, சீன நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். (J.R.A.S. 1920 Page: 147) வண்டிகளை ஈர்க்கவும், பொதிகளைச் சுமக்கவும், ஊர்ந்து சல்லவும் பயன்படுத்தப்பட்ட, முதுகில் திமில் உடைய
இந்தியக் கால் நடைகள், பருசிய, சிரியா, ஆப்பிரிக்க நாடுகளின், வீட்டுவளர்ப்புக் கால்நடைகளின் ஒரு பகுதியாம் வண்ணம், நிலவழியாக, மேற்கு நோக்கிப் பரவியது . இயற்கையே, இவ்வகையால், அசிரியா, மற்றும் அதற்குப் பிற்பட்ட காலக்கலைகளில், அவற்றின் உருவமைப்புகளை நாம் காண்கிறோம்” எனத் திருவாளர் வார்மிங்குடன் குறிப்பிடுகிறார். (J.R.A.S. 1910 Page: 149-150) இந்தியர்களால் மேற்குநோக்கி அனுப்பப்பட்ட விலங்குதரு பொருள்களில், சிங்கம், புலி, சிறுத்தைகளின் நேர்த்தியான தோல்களும் இருந்தன என்றும் நாம் நம்பலாம். (J.R.A.S. 1910 Page: 159). குறைந்த அளவான எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, தேவை மிகுதியாகிவிடுவது இயல்பாகிவிட்ட கிழக்கு . ஆப்பிரிக்க நாடுகளுக்கு நெய்யும், எள் எண்ணெய்யும் பிற்காலத்தில் அனுப்பப்பட்டன. கி.பி. முதல் ஆண்டைய உண்மை நிலை இது. பழங்காலத்து நிலையும் இதுவாகவே இருந்திருக்கும்.(Periplus: page: 41)
பிற பண்டங்கள்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவற்றுள், நறுஞ்சுவை மண மருந்துப் பொருள்கள், உணவிற்கு மணம் காரம் ஊட்டும் பொருள்கள் ஆகிய இரண்டும், மிகுந்த மதிப்புடைய விளை பொருள்கள், திருவாளர் வார்மிங்குடன் கூறுவதுபோல, அரேபியர், இப்பொருள்களைத் தங்கள் தீபகற்பத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு செல்வது, பல நூற்றாண்டுக்காலம் நடைபெற்றது. பழைய பொயினிசியன் கப்பல்களில், மிளகே, மிக முக்கியமான வணிகப் பண்டம். நன்மிகப் பழங்காலத்திலிருந்தே, இலவங்கப் பட்டை, இந்தியக் கப்பல்களில், சோமாலி கடற்கரைக்கு நேரே கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரேபியா வுக்கும், எகிப்துக்கும் சிரியாவுக்கும் கைமாறிற்று.(J.R.A.S. 1910 Page: 180-187)
இந்தியாவுக்கும் பழைய எகித்துக்கும் இடையில், நீலம், மற்றும் பிற வண்ணக் கலவைப் பொருள்களில், நீண்ட கால வாணிகம் இருந்து வந்தது என்பது நன்கு தெரிந்த ஒன்று.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment