ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம்
ஃஃஃஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 11 April 2025 அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் (J.R.A.S. 1910 Page: 204). கிறித்து ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின்னர், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நேராகவோ, அரேபிய, எகித்திய இடைத் தரகர்கள் வழியாகவோ, உரோமானியர் பெற்றுக் கொண்ட வேறுபிற எண்ணற்ற இந்தியப் பண்டங்கள் பற்றிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளன. இப்பொருள்களின் வணிகப் போக்குவரத்து, மேலும், பழமைவாய்ந்த காலத்திலிருந்தே வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தைச் சேர்ந்த அகச்சான்று எதுவும் நம்மிடையே இல்லை. இந்திய வாணிகம், அப்பழங் காலத்தில் நடைபெற்றது அரேபியாவுடனும், கிழக்காப்பிரிக் காவுடனுமாம். அது பண்டமாற்று முறையிலேயே நடை பெற்றது. தங்கள் பண்டங்களுக்கு மாற்றுப் பொருள்களாக, இந்தியர்கள், பொன், சாம்பிராணி, குங்குலியம், நறுமணப் பொருளுக்குப் பயன்படும...