கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 12 December 2024 அகரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை இசைச் செல்வி கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம் எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் 5 இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில் ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி 10 ஈங்குன துளம்யாது?’ என்றலும் உ...