Posts

யாவினும் புண்ணியம் எழுத்தறிவித்தலே! - பாரதியார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 October 2015       No Comment யாவினும் புண்ணியம்  எழுத்தறிவித்தலே ! வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாதொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் … …. … இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திர மாயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் … …. அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்: வெள்ளைத் தாமரை (படங்கள் : த.இ.க.கழகம், விக்கிபீடியா, அனைவருக்கும் கல்வி மாநாட்டறிக்கை & பல்லடம் தாய்த்தமிழ்ப்பள்ளி) ( அகரமுதல 102   ஐப்பசி 08, 2046 / அக். 25 .10.2015 )

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 October 2015       No Comment ஆங்கிலக் கல்வியால் பயனில்லை கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்; வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வரரெட் டுணையப்பயன் கண்டிலார் பாரதியார் பாரதி தன்வரலாறு (சுயசரிதை) ( அகரமுதல 102   ஐப்பசி 08, 2046 / அக். 25 .10.2015 )

களப்பால் குமரனின் கல்வி மொழிகள்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 October 2015       No Comment எவை எவை கற்க அவைஅவை கற்றபின் அவை அஞ்சாமை தோன்றும் களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7 + + + அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன் பொய்யா புகழ் பெறுவர். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7 + + + பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர் பொறுமை காத்தல் இழிவு. களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7 + + + பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில் பிணம் தழுவிப் பெறும் இன்பம் ஒக்கும். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 9:4: பக்கம்.9 + + + கல்லான் தாய்மொழியில் கற்றது விரிந்துரையான் பெற்றது அறிவன்று பிறமொழியில் களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 95: பக்கம். 9 ( அகரமுதல 102   ஐப்பசி 08, 2046 / அக். 25 .10.2015 )