நல்வழி First Published : 12 Jul 2009 01:42:00 AM IST Last Updated : தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. (பா-16)கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் தண்ணீரின் தன்மை நல்ல நிலத்தாலும், நல்லவர்கள் பண்பு ஈகையாலும், கண்களின் தன்மை மாறாத கருணையாலும், பெண்களின் தன்மை மாறாத கற்பின் வலிமையினாலும் விளங்குவது வியக்கத்தக்கச் சிறப்பு என்பதை நீ அறிவாயாக!
Posts
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலாரசிகன் தினமணி First Published : 05 Jul 2009 11:00:00 PM IST Last Updated : சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் முனைவர் இரத்தின வேங்கடேசன், "புதுச்சேரித் தமிழ்க் கவிதைகள்' என்கிற அற்புதமான ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரெஞ்சு ஆட்சியிலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த 40 ஆண்டு காலக் கவிதைகள் இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பண்டைய தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியதுதான் வேதபுரி என்று அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி என்றாலும், அரிக்கமேட்டு அகழ்வாய்வு, இந்தப் பிரதேசம் ஈராயிரம் ஆண்டு இலக்கிய, சரித்திரப் பாரம்பரியத்தை உள்ளடக்கியது என்பதைத் தெளிவாக்குகிறது. அது இந்திய தேசிய விடுதலை இயக்கமாக இருந்தாலும் சரி, தமிழையும் தமிழ் இனத்தையும் முன்னிறுத்தி எழுந்த திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, புதுச்சேரியின் பங்களிப்பு கணிசமாகவே இருந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த வீரராகவக் கவி என்பவர் எழுதிய "வில்லைப் புராணம்...
- Get link
- X
- Other Apps
தனிப்பாடல்களில் கலை-பண்பாடு குரு.சீனிவாசன் தினமணி First Published : 05 Jul 2009 11:03:00 PM IST Last Updated : பண்டைத் தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து என்னும் கலை, பழமையான பாரம்பரியம் உடையது. பலவகையான கூத்துகளில் "கழைக்கூத்து' என்பதும் ஒன்று. வலிமையும் உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு, அவற்றினுக் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி, ஆடவரும் பெண்டிரும் அதன்மேல் நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதே கழைக்கூத்து ஆகும். அந்தக் கூத்தில் வல்ல கலைஞர்கள் "கழைக் கூத்தாடிகள்' என்று அழைக்கப்பட்டனர். கழைக் கூத்தினுள்ளும் "விச்சுளிப் பாய்ச்சல்' என்னும் விந்தை மிக்கதோர் ஆடற்பிரிவு இருந்ததாகத் தனிப்பாடல் ஒன்றின் வாயிலாக அறிய முடிகிறது. விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது. உயிரைப் பெரிதாக மதிக்காதவரால் மட்டுமே நிகழ்த்தப்படக் கூடியது. அதைச் செய்வோர் கழையின் கயிற்றில் ஏறி நின்று, யோகப் பயிற்சியால் மூச்சை அடக்கித் தம் உடலின் பளுவைக் காற்றின் பளுவுக்குச் சமன் செய்துகொண்டு வர வேண்டும். பின்னர் கயிற்றினின்று...
- Get link
- X
- Other Apps
சொல்லேருழவர்' மா.சின்னு தினமணி First Published : 05 Jul 2009 11:04:00 PM IST Last Updated : புகழ்பெற்ற ஒருவரை அடையாளங் காட்டுவது அவர் பெற்ற சிறப்புப் பெயர் அல்லது அவர் பெயருடன் இணைந்து வரும் அடைமொழியாகும். தொல்காப்பியனார் காலத்தில் இருந்தே இச்சிறப்புப் பெயர் வழக்கில் இருந்து வருகிறது. உலகத்தவர் ஒருவருடைய சிறப்புப் பெயரை முதலில் கூறி, பிறகு இயற்பெயரைக் கூறுவர்; இயற்பெயர் கூறி, சிறப்புப் பெயர் கூறுதல் மரபன்று என்றார் தொல்காப்பியனார். கணியன், மருத்துவன் என்ற சிறப்புப் பெயர்கள் முறையே பூங்குன்றன், நல்லச்சுதனார் என்ற இயற்பெயர்களுடன் சேர்த்துக் கணியன்பூங்குன்றனார், மருத்துவன் நல்லச்சுதனார்(இவர் பரிபாடலில் சிலவற்றிற்கு இசை வகுத்தவர்) என வழங்கப்பட்டன. இன்று "டாக்டர்' பட்டம் ஏதேனும் ஒரு நல்ல துறையில் வல்லுநருக்கு வழங்கும் பட்டமாக உள்ளது. அன்று சிறப்புப் பெயர் என்றனர். இன்று பட்டம் என்கிறோம். தமிழ்த்துறை ஆய்வாளர்கட்கு "டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டாலும் இது பிறமொழிச்சொல் என்பதால் இதற்கு நிகராக "முனைவர்' என்ற சொல்லைத் தம் பெயரு...