Posts

Showing posts with the label வி.பொ.பழனிவேலனார்

கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         11 December 2025         அ கரமுதல ( கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும்  3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தி யின் இறப்பைச் சாக்காக வைத்து  தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து இலங்கை அரசும் இதுதான் நல்வாய்ப்பென்று ஈழத்தமிழர்க்கு எதிர்ப்பாகக் குரல் கொடுப்பதுடன்  விடுதலைப்புலி களை இழிவுபடுத்தியும், ஏளனமாகவும் பேசி ஒலிபரப்புகிறது. தமிழகத் தமிழர்க்கு விடுதலை பெற விடுதலைப்புலிகள் உதவக்கூடும்...

க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ          இலக்குவனார் திருவள்ளுவன்         13 November 2025         அ கரமுதல ( கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்- தொடர்ச் சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ . தமிழர் க௩. போலித் தமிழர் இன்று  தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர் முதலிய பலமொழி பேசுபவரும் வாழ்கின்றனர். தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர். ஐந்து கோடியில் ஒன்று அன்றி ஒன்றரைக் கோடிப் பேர் இருப்பர். ஆனால், தமிழ்நாட்டில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்பவர் பலர்  மதவேறுபாடு, ம...

கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்

Image
  ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         25 October 2025         அ கரமுதல ( கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ . தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு  அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா?  தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம் சாற்றி அவர்கள் மீது தடை விதித்துள்ளது முறையா? தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக இன்றும் பரிந்து உரிமைக்குரல் கொடுக்கும் இந்திய அரசு,  தமிழ்நாட்டுத் தமிழர் இலங்கைத்தமிழர்க்கு எவ்வகை உதவியும் செய்யக் கூடாதென்று ...

கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்

Image
  இலக்குவனார் திருவள்ளுவன்         16 October 2025         No Comment ( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை   நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட  நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது.   உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே  என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள் காலத்திற்குப் பின்னர், தமிழ்மொழி, பல இடர்ப்பாடுகட்கு உள்ளாயிற்று. தமிழ்நாடு, பல வகை அரசர்களின் படையெடுப்புகட்கு ஆளாயிற்று. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள், தம்மொழிகளையும் – மதங்களையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். ஏன் – தம் நாட்டு மக்களையும் கொண்டு வந்து குடியேற்றி...

அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         14 September 2025         அ கரமுதல (எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள் புலவர்   வி . பொ . பழனிவேலனார் ஆ.தமிழர் அ. பழமையும் புதுமையும் பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா.  பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம். பழமையில் தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது.  தமிழர் பனிமலைமுதல் குமரிவரை பேராட்சி புரிந்தனர்.  சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று மேலைநாட்டறிஞர் ஆய்ந்து அறைகின்றனர். கடல் கொண்ட தென்னாடாகிய குமரிக் கண்டமே முதல் தமிழர் தோன்றிய தொ...