இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13492   பதிவு செய்த நாள் : August 13, 2011



சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர்.  சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர்.  தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே.  தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும்.  உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம்.  மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே.  இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான்.  ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல்  ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138)

Comments