தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி.(பா-30)அரசே! ஒவ்வொருவரும் முன் செய்த வினையின் பயன்களை, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் விதித்த ஊழ்வழியே தாம் அனுபவிப்பார். தீமை செய்தவரை நம்மால் என்ன செய்ய முடியும்? ஊரார் அனைவரும் ஒன்று திரண்டு மறுத்தாலும் விதியின் பயனை விலக்க முடியாது.
Popular posts from this blog
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment