மரம் பழுத்தால் வெüவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாருமங் கில்லை - சுரந்தமுதம்கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்உற்றார் உலகத் தவர்.(பா-29)மரத்தில் பழம் பழுத்திருந்தால் வெüவாலை வாவென்று கூவியழைப்பவர் எவரும் அங்கில்லை. அவை, தாங்களாகவே வந்து சேரும். கன்றினையுடைய பசுவானது பாலினைத் தருவது போல, தம்மிடம் உள்ளதை பிறருக்குக் கொடுப்பாரானால், உலகினர் தாமாகவே வந்து உறவினராவர்.
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment