பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்குஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம். (பா-22) கடினமாகப் பாடுபட்டு சம்பாதித்த பொருளை யாருக்கும் உதவாதபடி மண்ணில் புதைத்து வைத்துப் பாழாய்ப் போகும் மனிதர்களே கேளுங்கள் - பாவிகளே! உயிர் உடம்பை விட்டு அகன்ற பிறகு, அச்செல்வத்தை அனுபவிப்பவர் யார்? எவருமே இல்லை. எனவே, பொருளைப் புதைத்து வைப்பதற்கு அறியாமை மட்டுமல்ல, அறத்தை உணராமையும் காரணம்.
Popular posts from this blog
பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment