நல்வழி



நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும்சிவந்த தாமரையாள் தான்.(பா-21) செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு எக்காலத்தும் நீர் வளமும், உறைவிடமும், நிலம் நிறைய நெற்கட்டுகளும், பெருமையும், புகழும், சிறந்த வாழ்க்கையும், ஊர்களும், வளரும் செல்வமும், நீண்ட ஆயுளையும் தருவாள்.

Comments