ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. (பா-11) துன்பத்தை அதிகப்படுத்துகிற எனது வயிறே! ஒரு நாளுக்கு உணவை உண்ணாது இரு என்றால் இருக்க மாட்டாய். கிடைக்கும் போது, இரு நாளுக்குரிய உணவை ஏற்றுக்கொள் என்றால், ஏற்கமாட்டாய். ஒருநாளும் எனது துன்பத்தை அறியாமல் இருக்கின்ற உன்னோடு வாழ்வது பெரும்பாடாக இருக்கின்றது.
Popular posts from this blog
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment