Posts

அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ.

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         16 July 2024         அ கரமுதல ( அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் கல்வியும் கல்லாமையும் கவிராசர் செகவீர பாண்டியனார்  ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் செகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு, ‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ – என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி’ என்று மறுபடியும் கேட்டார். வந்தவர் அதற்கும், திரும்பத் திரும்ப – ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன் என்றே சொன்னார். கவிராசர் சிறிது யோசித்து – சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, ‘தங்களுக்குக் குழந்தை உண்டா?’ என்று கேட்டார். ‘இருக்கிறான், ஒரே பையன்’ – என்றார் வந...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         12 July 2024         அ கரமுதல (என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்   9.  அனைய கொல்! அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயைபினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே வாழ்வுத் துணையாகும், அஃது ஒன்றைப் பெறுவதினாலேயே தன் வாழ்வு நிறைவாகி விடும் எனக் கருதும் குறுகிய உள்ளம் உடையவனல்லன். பொருளிட்ட வேண்டும் என்றாலும், அதை அறவழியிலேயே ஈட்ட வேண்டும் என்றாலும், ஈட்டிய பின்னர் அப்பொருட் பயனாம் இன்பத்தைக் குறைவற நுகர்தல் வேண்டும் என்ற விரிந்த உள்ளமும் அவனுக்கு உண்டு. அவன் பால் அப்பண்பு குறைவறக் குட...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         11 July 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தமிழினமும் குரங்கினமும் தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்; தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத் தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75 குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்; மரக்கிளை வாழும் மந்தியின் மானம் நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்! மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு, 80 தணிவறு காதல் தாய்மனம் உருகிப் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய, அறியாக் குழவி அலறுதல் போல, அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப் பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85 சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப் பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித் தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும்; சேய்நலங் கருதிய தாய்,மருந் துணல்போல் உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் 90 விலகா ததனை வி...

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         09 July 2024        அகரமுதல அறிவுக்   கதைகள்   நூறு பதிப்புரை கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால்  வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன . இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர். கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த  நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும். தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு வாழவேண்டும் என்று கருதுபவர்  முனைவர்  முத்தமிழ்க் காவலர், கி. ஆ. பெ. விசுவாதம் அவர்கள். இந்த நோக்கில் அவர்கள் அரிய பல கருத்துச் செல்வங்களை வழங்கி வருகின்றார்கள். இப்போது, ‘”அறிவுக் கதைகள் நூறு’’ என்னும் இந்த நூலையும், அருளோடும் அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள். இத்...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         05 July 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 8. திருமுருகாற்றுப்படை அறிமுகம் திருமுருகாற்றுப் படை , வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும்  பொருநராற்றுப்படை  முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவராற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது, “இதனைப்  புலவராற்றுப்படை  என்று உயர்ந்து உணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமை மறுக்க” (முருகு : 295 : உரை) என்னும் நச்சினார்க்கினியர் உரையால் தெளிவாகும். தெய்வ யானையின் கணவன் நீல வண்ண நீர் நிறைந்த கடலில், கா...