கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 13 June 2024 அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி ) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்; ‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச் செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும் புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப் புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன், நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும் அல்லும் பகலும் செல்லும் சிதலும் சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய குறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ! தமிழுக் குறுபகை எத்தனை தாயே! அமுதத்தமிழே! அன்னாய்! வாழி! அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம் நவையற நிறுவி நடத்துதல் என்பணி, நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்; வாழ்த்தும் பாராட்டும் ஆவல் தமிழில் அளவிலா துற்றனை! குறள் நூல் தொல்காப் பிய நூல் இரண்டும் மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர், வாழ்கநின் னுள்ளம் வாழ்கநின் துறவு! உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர் அன்பால் தமிழின் ஆக்கங் கருதித் துயரெது வரினும் து...