Posts

வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         22 March 2024        அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’ என்பர்  சிவப்பிரகாசர் . ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு ” என்பது வள்ளுவர் தெள்ளமுத வாக்கு. பாரியின் கொடைநலத்தைப் பாராட்டிய பாவலர்  கபிலர்  பெருமானும், அப் பாரியை மாரிக்கு ஒப்பிட்டு உரைப்பார் ” நாட்டில் உள்ள புலவர் பலரும், பாரி, பாரி’ என்று அவன் ஒருவனேயே பாராட்டுகின்றனர். இவ்வுலகத்து உயிர்களைப் புரத்தற்குப் பாரி ஒருவனே அன்றி மாரியும் உண்டே’ என்று வஞ்சப் புகழ்ச...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         20 March 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி ) அத்தியாயம் 8.  கடல்நகரில் தங்கிய காதை நகரத்தார் வேண்டுதல் தாமரைக் கண்ணி தன்னொடு வந்த தோமறு பூங்கொடி தூயநல் லுரையால் திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே, `இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள் நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5 புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்து மல்கிருள் அகல மதியொளி பெற்று நல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம் ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப் போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10 இசைவு தருதல் பக்கல் நிற்கும் கண்ணியைப் பார்த்தனள் அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின் தோமறு பணிசெயத் தூயவ ளாகிய தாமரைக் கண்ணி தந்தனள் இசைவே; ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி 15 மீண்டனள் மணிநகர்; மெல்லியல் அல்லி அல்லி வினவல் ஈண்டிய அன்புளத் தெழிற்பூங் கொடியைக் காண்டல் விருப்பொடு கடுகி வந்தனள்; தோழியைக் காணாள் துயர்படர் நெஞ்சினள் `ஆழி நடுநகர் ஆங்கண் சென்றீர்! 20 நீயோ தமியள் நின்றி...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         16 March 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 7 கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட  செங்குட்டுவன்  கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்” 1  என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர் இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல் வழியாக நிகழ்ந்த வருத்தகத்தால் சேரநாடு சாலவும் வளமுற்றிருந்தது. அந் நாட்டில் அமைந்த  முசிறி  என்னும் துறைமுகம் உலகறிந்த நகரமாய் விளங்கிற்று.  யவன நாட்டிலிருந்தும், அரேபியாவிலிருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும்  வருத்தகக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருந்தமையால், அத் துற...

வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         15 March 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள்  ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர் ஈகை, ஒப்புரவறிதல், அருள் முதலாய பல அதிகாரங்களை வகுத்துள்ளார். இல்லறத்தார் இனிது போற்றவேண்டிய அறம் ஈகையே. இவ் ஈகையின் இலக்கணமாக வள்ளுவர், “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்று வரையறுத்துக் கூறினார். வறியர் அல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்ப தெல்லாம் குறியெதிர்ப்பைக் கைம்மாறு கருதலே ஆகும். அளவு குறித்து ஒரு பொருளை மற்றவர்...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

Image
  ஃஃஃ          இலக்குவனார் திருவள்ளுவன்         13 March 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடி சொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில் கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல் சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120 நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல் அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச் சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ? திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை உரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 ஞாலத்து இயற்கை நல்லன செய்வோர்க்கு நலிவே தருதல் மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்; உலகுக் குழைக்கும் உத்தமர் தம்மைச் சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும் கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் 130 நஞ்சுணச் செய்தும் நலிவுகள் தந்தும் நன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம் இன்றுநம் மிடையே இறுகப் பிணைந்தது; ஆதலின் இச்செயல் ஆற்றத் துணிந்தீர்! பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135 கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில் அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையு...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         09 March 2024        அகரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம் புலிகேசன் வடநாட்டில் உள்ளது  வாதாபி  நகரம் 1.  அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்  சளுக்கர் குல வேந்தர் . அக் குலத்திலே தோன்றினான்  புலிகேசன்  என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன்  கங்கரையும் கதம்பரையும் வென்றான்;  அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது. நரசிம்மனும் புலிகேசனும் அக்காலத்தில் நரசிம்மன் என்னும் பல்லவ மன்னன்  காஞ்சி மாநகரில்  அரசு புரிந்தான். அவனையும் வெல்லக் கருதிப் படையெடுத்தான் புலிகேசன். அப்போது பல்லவன் சேனை விரைந்து எழுந்தது; சாளுக்கியப் படையை மணி  மங்கலத்திலே  தாக்கிற்று. பல்லவப் படையின் வேகத்தைக் கண்ட புலிகேச...