கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 27 December 2023 அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி ) 6. கல்லறை காண் காதை நிலவும் உடுவும் மாலைப் பொழுதில் மேலைத் திசையில் சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன் இரவெனும் ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட 5 நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; துதலிற் புரளும் சுருள்குழல் வரைய 10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன் களங்கப் பட்டது கண்டனன் நெஞ்சம் துளங்கிக் கனன்று தூரிகை வீசி உதறினன்; கிண்ணம் ஒன்றனிற் பட்டுச் சிதறிய வெண்ணிற வண்ணம் சிரித்திட 15 அதனை உடுவென அறைந்தனர் உலகோர்; வண்ண அவ் வுடுக்களும் வட்ட நிலாவும் கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம் வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் வீசின; தாமரைக்கண்ணி வினவல் அவ்விடை அவண்வரும் ஆ...