Posts

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         25 August 2022         No Comment (புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடை நாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக் கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களை ஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக் கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவை உண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத் தெண்ணிய படியரங் கேற்றி னானரோ. 38. அவ்வரங் கேறிய வரிய நூல்களை ஒவ்வொரு தமிழரு மோதி யின்புற அவ்விடை யேடெழுத் தாணி யோடமை செவ்விய இலச்சினை செறித்திட் டானரோ. 39. அவ்வகை யொவ்வொரி யாண்டி னோர்முறை செவ்விய நூலரங் கேற்றிச் சீருற ஒவ்விய படியெலா முழைத்துத் தீஞ்சுவை வவ்விய முத்தமிழ் வளர்த்து வந்தனன். 40. ஈங்கிது வாகவாண் டிருந்து செந்தமிழ்ப் பாங்குட னாய்தமிழ்ப் பாவல் லோர்களால் ஓங்கிய முத்தமி ழோதி யத்தமிழ் ஆங்குயர் வழிகளு மாய்ந்து வந...

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         21 August 2022         No Comment ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி ) 2.  மொழிகளும் மொழிக்குடும்பங்களும்   உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ  ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.  இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன;  இன்றும் உயிருடன் வாழ்கின்றன.             1.செருமன் குழு: ஆங்கிலமும் இதில் சேரும்.             2. இலத்தீன், உரோமான்சு.             3. கிரீக்...

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         20 August 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி ) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ உண்டு. மதுரையின்‌ அருகேயுள்ள அழகர்‌ கோவில்‌ பழங்காலத்தில்‌ திருமால்‌ இருஞ்சோலை என்று பெயர்‌ பெற்றிருந்தது. 32  பழமுதிர்‌ சோலை  முருகப்‌ பெருமானது படைவீடுகளில்‌ ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்‌. 33  சேலம்‌ நாட்டில்‌ தலைச்சோலை என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும்‌ ஊர் உள்ளது. தோப்பு மரஞ்‌ செடிகள்‌ தொகுப்பாக வளரும்‌ இடம் தோப்பு என்று அழைக்கப்படும்‌. 34   தோப்பின்‌ அடியாகப்‌ பிறந்த ஊர்களும்‌ உண்டு.  மந்தித்‌ தோப்பு  என்னும்‌ ஊர்‌ நெல்லை நாட்டிலும்‌ மான்தோப்பு இராம நாதபுரத்திலும்‌, நெல்லித்‌ தோப்பு தஞ்சை நாட்டிலும்‌, வெளவால்‌ தோப்பு தென்னார்க்காட்டிலும்‌ விளங்குகின்றன. சுரம்‌ சுரம்‌ என்பது காடு. தொண்டை நாட்டில்‌ உள்ள திருச்சுரம்‌ இப்பொழுது திரிசூலம்‌  என வழங்குக...

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 13

Image
அகரமுதல   இலக்குவனார் திருவள்ளுவன்         20 August 2022         No Comment ( பேரறிஞர் அண்ணாவின் கு மரிக் கோட்டம் 12 இன் தொடர்ச்சி ) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். ”வைசிய குலத் திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரசாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்விய சேத்திரத்தில் நடப்பதா?” என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறை யூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று சாதி குலம் என்ப தெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான், கலகம் கல்லடி இவற்றைப் பொருட்படுத்தாமல். ஆதார பூர்வமான அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, பெரும்பாலான மக்கள், அவனுக்கு ஆதரவுதர முன் வந்தனர். வைதிகர்கள் பயந்து போயினர், சனசக்தி, பழனிபக்கம் குவிவது கண்டு. “இதுபோன்ற இனிமையான அறிவுக்கு விருந்தான பிரசங்கத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. உன்னை மகனாகப் பெற்ற நான் உண்மையிலேயே பாக்கியசாலி” என்று ...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 67

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 August 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 66 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் அத்தியாயம் 24 தொடர்ச்சி “நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்” என்று அந்த அம்மாளோடு  காரில்  செல்லும் போது அரவிந்தன் சொன்னான். “பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில்  எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான். மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி ...

இறந்தது நெல்லை இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 August 2022         No Comment இறந்தது நெல்லை   இற்றதோ மனமே! இறந்தது நெல்லை   இற்றதோ மனமே துறந்தது உடலை    தூயரோ கண்ணன்; சற்றைப் போதில்   சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே!   சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன்   பறித்தான் உயிரை! மேவிய புகழுடை   மேதினிப் புலவ! நெல்லை கண்ணா   நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி   நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில்   அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச்   சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை    மிக்கா ரில்லை. தப்பே இன்றித்   தமிழை வளர்த்தாய்! போயினை அந்தோ   போயினை துடுப்பே போயிடின் படகென்    செய்யும்?பரிதவிக்கும் காரிருள் தன்னில்   கைவிளக் கணைத்த காரிருள் காலனே!    கோபம் கொண்டேன்! வடிந்திடும் கண்ணீர்   வருந்தி அழுகிறோம்! தடியன் காலன்   தவிக்கவே செய்தான்! தமிழே சாய்ந்திட   தவிக்கிறோம் நாளும் அமிழ்தக் கண்ணா   அந்தோ அந்தோ! த....