Posts

தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 November 2021         No Comment (தந்தை பெரியார் சிந்தனைகள் 23 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 24 3. சாதிக்கொள்கை தொடர்ச்சி (ஊ)  சமுதாயத்தில் நலம்  ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும்.  இன்றைய ஆட்சி, சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல. தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும்  தன்னிச்சையாகவோ , சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச்  சமுதாயத்தில்  ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவிதச் சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம்  பிரச்சாரத்தால்தான்  செய்யவேண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்களின் சங்கங்கள் இவற்றைச் செய்து வருகின்றன. அனைத்தையும், மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காலந்தோறும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.    (7) சாதிவேற்றுமையை வள...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 November 2021         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 தொடர்ச்சி “நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். “உனக்கு மேசையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி?” “இல்லை.” “பார்த்தாயா;  இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது ” என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேசுவரி அம்மாள். “மன்னிக்க வேண்டும் அம்மா! உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும...

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 November 2021         No Comment ( தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க்   கிளர்ச்சி : 16/17   இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்கு நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானை நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினே தண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானை தாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை       (76)   தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறு கோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானை கோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின் வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானை சுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை       (77) ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயை ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டும் அம்மானை ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டு மாமாயின் பாங்கான இந்திதனைப் பரப்புவரே அம்மானை பரப்பவிடின் தமிழ்முன் போல் பதவியறும் அம்மானை       (78) பொய்ஞ்ஞானம் நீக்கிப...