Posts

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 October 2021         No Comment ( தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச் சி ) தனித்தமிழ்க்   கிளர்ச்சி –  சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானை முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர் அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானை ஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானை சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின் இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானை நன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள் அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானை அரசர் அடங்கிமிக அரசாண்டா ராமாகில் அரசரினும் புலவர்தம் ஆற்றலென்ன அம்மானை ஆற்றல் தமிழ்தந்த ஆற்றலே அம்மானை       (48) விசிறிதன் கைக்கொண்டு விசிறினன்காண் அம்மானை விசிறிதன் கைக்கொண்டு விசிறியது மெய்யாகில் விசிறிய காரணத்தை விளம்பிடுவாய் அம்மான...

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7.

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 October 2021         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6. தொடர்ச்சி) குறிஞ்சி   மலர் அத்தியாயம்  2  தொடர்ச்சி   அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி   சுமாருக்காவது   புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம்.   ‘பிராவிடண்டு பண்டு’   பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு ‘வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக’த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரைப் பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள...

ஆட்சிமுறை குறித்த பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 October 2021         No Comment ( தந்தை   பெரியார்   சிந்தனைகள்  16  இன்   தொடர்ச்சி ) தந்தை   பெரியார்   சிந்தனைகள்  17 1. ஆட்சிமுறை. இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம். (1)  ஆட்சிமுறை என்பது யார்  நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது. (2)  “ஓர் இணைச்செருப்பு  14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை” என்கின்றார். (3)  மக்களை  வருணசிரமத் தர்ம  முறைக்கும் , காட்டு மிராண்டிக் காலத்துக்கும் கொண...