தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார்: 3/17
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 30 September 2021 No Comment ( தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி ) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 3/17 தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும் வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானை வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்த வானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானை வாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை (11) இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில் பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை (12) அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள் தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானை தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் தோன்றுதற்குத் தமிழ்நாட்டில் சிறப்பென்ன தங்கியுள தம்மானை தமிழைவிடச் சிறப்பென்ன தங்கவேண்டும் அம்மானை (13) மன்னிய தெய்வம் மதுரையில் பாண்டியனாய் நண்ணியதா ந...